Tiruvannamalai Crime| ஆம்புலன்ஸுக்குள் புகுந்து இளைஞரை தாக்கிய கும்பல் | தி.மலை ஹாஸ்பிடலில் பரபரப்பு
Tiruvannamalai Incident | Crime | TN Police | ஆம்புலன்ஸுக்குள் புகுந்து இளைஞரை தாக்கிய கும்பல் | தி.மலை ஹாஸ்பிடலில் பரபரப்பு #tiruvannamalai #crime #TNPolice #thanthitv அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸுக்குள் புகுந்து இளைஞர் மீது தாக்குதல் போதையில் தகராறு செய்தவரை தட்டிக்கேட்ட இளைஞருக்கு அடி உதை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்சில் அழைத்து வரப்பட்ட இளைஞரை, கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரப்பாக்கம் பகுதியில் சாலையில் சென்ற வாகனத்தை நிறுத்தி போதை ஆசாமி ஒருவர் தகறால் ஈடுபட்டுள்ளார். இதை தட்டிக்கேட்ட இளைஞரை, குடிபோதையில் இருந்த நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்த தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த இளைஞரை அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே, அந்த போதை ஆசாமி, இதுகுறித்து மருத்துவமனை பகுதியில் உள்ள கூட்டாளிக்கு தகவல் தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தயாராக இருந்த கும்பல், ஆம்புலன்ஸ் வந்த உடன் அதில் இருந்த இளைஞரை உள்ளே புகுந்து தாக்கியுள்ளனர். இதனால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
