இன்ஸ்டாகிராமில் பழகி சிறுவர்களை கடத்தும் கும்பல் - சென்னை பெற்றோர்களே உஷார்
சென்னை மண்ணடியில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 17 வயது சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயன்ற கும்பலை போலிசார் தேடி வருகின்றனர். மண்ணடியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் இன்ஸ்டாகிராம் மூலம் பல பேரிடம் பழகி வந்த நிலையில் இன்ஸ்டா நண்பர் ஒருவரை சந்திக்க சென்றபோது அங்கு ஆட்டோவில் காத்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் சிறுவனை கடத்திசென்று பணம் நகை கேட்டு அடித்து துன்புறுத்தியுள்ளனர். பணம் கிடைக்காததால் சிறுவனை இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் ஆட்டோ ஓட்டுனர் வசந்த என்பவரை கைது செயதனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட ஏழுகிணறு பகுதியை சேர்ந்த விஜி, பரத், ரஞ்சித் ஆகியோரை தேடி வருகின்றனர்.
Next Story
