கேங்க் லீடர் பிரச்சினை..சீருடையிலேயே தாக்கிக் கொண்ட மாணவர்கள்..வைரல் வீடியோ

கேங்க் லீடர் பிரச்சினை..சீருடையிலேயே தாக்கிக் கொண்ட மாணவர்கள்..வைரல் வீடியோ
Published on

அங்குள்ள கீழ்மாம்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மதிய இடைவெளியில் சாப்பிட சென்றனர். அப்போது, மாரியம்மன் கோயில் அருகே நின்றிருந்த 11ஆம் வகுப்பு மாணவர்கள், பள்ளியில் நான் தான் கெத்து என்று கூறி ஒருவருக்கு ஒருவர் சீருடையில் தாக்கிக் கொண்டனர். தகாத வார்த்தைகள் பேசியபடி மாணவர்கள் தாக்கிக் கொள்வதை பார்த்து, அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள், கேங்க் லீடராவதற்காக அடித்துக் கொள்ளும் மாணவர்களை எச்சரிப்பதோடு, நல்லொழுக்கத்தை ஏற்படுத்தி மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com