போலீஸ் எனக்கூறி ஸ்பாவில் நுழைந்த கும்பல்-பெண் ஊழியர்களை அறையில் அடைத்து..
நாமக்கல்லில் போலீஸ் எனக்கூறி, ஸ்பாவில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் திருச்சி சாலையில் இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான ஸ்பா செயல்பட்டு வருகிறது. இங்கு போலீஸ் என கூறிகொண்டு வந்த 7 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த பெண் ஊழியர்களை அறையில் அடைத்து மிரட்டி அவர்களிடமிருந்து ஒன்றரை சவரன் நகை, 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றது. சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்குகளையும் அந்த கும்பல் எடுத்து சென்ற நிலையில், புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
