பரோட்டா சாப்பிட சென்று முரட்டு தனமாய் மோதிகொண்ட கும்பல் - சிதறிய சைக்கிள், செல்போன்
நெல்லை முன்னீர்பள்ளம் அருகே நடந்த கோஷ்டி மோதலில் பெண் உள்பட 4 பேர் காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே பிரகாஷ் மற்றும் சில இளைஞர்களும், இசக்கிபாண்டி மற்றும் சில இளைஞர்களும் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பரோட்டா சாப்பிட சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது. இதில் மோட்டார் சைக்கிள்கள், செல்போன் சேதம் அடைந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மோதலில் காயம் அடைந்த பிரகாஷ், பால அருண், அஜய் மற்றும் ஒரு பெண் ஆகியோரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
