Sivagangai Murder | இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல் - பட்டப்பகலில் படுபயங்கர சம்பவம்
Sivagangai Murder | இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல் - பட்டப்பகலில் படுபயங்கர சம்பவம்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் இன்று காலை பட்டப்பகலில் ஜேசிபி ஆபரேட்டர் ஒருவர் மர்ம நபர்களால் விரட்டி விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இழந்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 23) ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளார். இன்று காலை இருசக்கர வாகனத்தில் கீழடியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து கீழே தள்ளியுள்ளனர். தொடர்ந்து கண்ணனை விரட்டி விரட்டி சரமாரியாக வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தால் கீழடி பகுதியில் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சம்பவம் குறித்து கீழடி போலீசார் விசாரணை மேற்கொண்டு, கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
#Sivagangai #Murder #TNPolice #Crime #ThanthiTV
