எதிராக போராடியவரை கொடூரமாக அடித்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்த விஷ கும்பல்...பகீர் வாக்குமூலம்
சிவகங்கையில், சமூக ஆர்வலரை, தாக்கிய ஒரு கும்பல் அவரை மருத்துவமனையில் விட்டுவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாலை கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ராதாகிருஷ்ணன் என்பவர் மணல் கொள்ளைக்கு எதிராக நீதிமன்றம் சென்று, 3 அடிக்கும் மேல் மணல் அள்ளத் தடை உத்தரவு பெற்றதாக கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை சிலர் மீறியதாக, ராதாகிருஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக தெரியவருகிறது. இந்த சூழலில், இவரை காரில் கடத்திச் சென்ற சில மர்ம நபர்கள், அவரை கொடூரமாக தாக்கிவிட்டு, பைக்கில் அழைத்து வந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்தம் சொட்ட சொட்ட விட்டுவிட்டு தப்பியோடினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
