இளம்பெண் தற்கொலை - ஆபாச வீடியோ வைத்து மிரட்டிய கும்பல் கைது

x

தென்காசி ஆலங்குளம் பகுதியில் திருமணமான 26 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவத்தில், அப்பெண்ணின் ஆபாச வீடியோவை வைத்து மிரட்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இன்ஸ்டாகிராமில் அறிமுகமான சக்திவேல் என்பவருடன் அப்பெண் தனிமையில் இருந்ததாகவும், அதனை வீடியோவாக பதிவு செய்து அவர் 4 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் தெரியவருகிறது. மேலும் பணம் கேட்டு மிரட்டியதால், அப்பெண் வீட்டில் நடந்தவற்றை கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் அப்பெண்ணின் ஆபாச வீடியோ உள்ளிட்டவையை அழித்தனர். ஆனால், மீண்டும் தனது மனைவியின் போனில் இருந்து வீடியோக்களை மீட்டு, பிறருக்கும் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து முத்துராஜ், முருகேசன் ஆகியோர் உட்பட 3 பேரும் அவரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இறப்பதற்கு முன்பு அப்பெண் எழுதியதாக 8 பக்க கடிதம் போலீசாரால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்