தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு

தமிழகத்தின் இன்று பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு
Published on

மாமல்லபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில், டிராலி உதவியுடன் கரைக்கப்பட்டது.

நாகை

நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 118 விநாயகர் சிலைகள் நம்பியார் நகர் கடற்கரையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.

நெல்லை

நெல்லை மாநகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 52 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வண்ணாரப்பேட்டை தாமிரபரணி நதிக்கரையில் கரைக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில், நகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த 62 விநாயகர் சிலைகள் சங்குமுக கடலில் கரைக்கப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com