Ganesh Chaturthi | விநாயகர் சிலையை கரைக்க போறீங்களா..? - லிஸ்ட் போட்டு வந்த ரூல்ஸ்

x

Ganesh Chaturthi | விநாயகர் சிலையை கரைக்க போறீங்களா..? - லிஸ்ட் போட்டு வந்த ரூல்ஸ்

விநாயகர் சிலைகளை கரைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

களிமண் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் , பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்ற விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது என வழிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம், எண்ணெய் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது என்றும்,

சிலைகளை அழகு படுத்த இயற்கை பொருட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும் என்றும்,

மேற்கொண்டு தகவல்களை பெற மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்