மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் : ஒலிபெருக்கி மூலம் கடலோர காவல் படை அறிவுறுத்தல்

கஜா புயல் எதிரொலியால் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு, இந்திய கடலோர காவல் படை ஒலிபெருக்கி மூலம் புயல் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் : ஒலிபெருக்கி மூலம் கடலோர காவல் படை அறிவுறுத்தல்
Published on

கஜா புயல் எதிரொலியால் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு, இந்திய கடலோர காவல் படை ஒலிபெருக்கி மூலம் புயல் எச்சரிக்கை விடுத்து வருகிறது. வங்கக்கடலில் தமிழகம் நோக்கி நகர்ந்து வரும் புயல் வரும் 15ஆம் தேதி வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியில் கடக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, வடதமிழகத்தின் கடலோர பகுதியில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என, ஒலிபெருக்கி மூலம் இந்திய கடலோர காவல்படை வீரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com