கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல் : மெல்ல, மெல்ல மீண்டெழும் வேதாரண்யம்

கஜா புயல் கோரத் தாண்டவம் ஆடி ஒராண்டு ஆகியுள்ள நிலையில், அதன் தாக்கத்தால் ஏற்பட்ட கடும் பாதிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது வேதாரண்யம்...
கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல் : மெல்ல, மெல்ல மீண்டெழும் வேதாரண்யம்
Published on

கஜா புயல் கோரத் தாண்டவம் ஆடி ஒராண்டு ஆகியுள்ள நிலையில், அதன் தாக்கத்தால் ஏற்பட்ட கடும் பாதிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது வேதாரண்யம்...உலகெங்கிலும் உள்ள தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும், மத்திய மாநில அரசுகளும் கை கொடுத்து உதவியதால் கஜா புயல் பாதிப்பை துச்சமென தூக்கியெறிந்து தங்களுடைய சராசரி வாழ்க்கைக்கு திரும்பத்துவங்கியுள்ளனர் பொதுமக்கள்..லட்சக்கணக்கான மரங்கள் புயலால் அடியோடு வீழ்ந்ததால் நிர்க்கதியற்றவர்களாக நின்ற விவசாயிகளுக்கு ஆறரை லட்சம் தென்னங்கன்றுகளை வழங்கியது வேளாண்மைத்துறை.அதேபோல், தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை மூலம் 60 ஆயிரம், மா, முந்திரி கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.கஜா புயலால் பாதித்த உப்பளங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டதையடுத்து நடப்பாண்டில் மட்டும் 4 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெற்றுள்ளது .கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் பகுதிகளை சேர்ந்த மீனவர்களின் பைபர் படகுகள் புயலில் சிக்கி முற்றிலும் சேதம் அடைந்திருந்த நிலையில், படகுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை அரசு நிவாரணம் வழங்கியது. இதனால் கஜா புயல் தந்த சோகத்தையும் தாண்டி மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.அதேபோல் புயலால் வீடுகளை இழந்தவர்களுக்காக முதல்கட்டமாக ஆயிரத்து 500 வீடுகள் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.புயலால் பாதித்த குடிசை வீடுகளுக்கு பதிலாக ஒரு லட்சம் நிரந்தர வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என அறிவித்துள்ள அரசு, அதற்காக 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புயலால் மரங்களை இழந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணத்தொகை முழுமையாக சென்று சேரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com