கஜா நிவாரணம் - மத்திய அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவு

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விபரங்கள் போதுமானவையா என மத்திய அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க அதன் வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கஜா நிவாரணம் - மத்திய அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவு
Published on

* கஜா புயல் பாதிப்பு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருமுருகன் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

* இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசு கேட்டதற்கிணங்க தமிழக அரசு அளித்த விளக்கங்கள் போதுமானவையாக இல்லை என்றும், மீண்டும் சில விளக்கங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

* விளக்கம் அளிக்கப்பட்ட 2 நாட்களில் மத்திய குழு இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும் என்றும், அதனடிப்படையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு விவாதித்து 2 வாரங்களில் கஜா புயலுக்கான நிவாரண தொகை வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

* தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசு கோரிய கூடுதல் விளக்கங்களை அளித்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு அளித்த விபரங்கள் போதுமானவையா என மத்திய அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க அதன் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 19ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com