

திருவாரூர் மாவட்டம் மாங்குடியில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சரால் நலத் திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து முதலமைச்சருக்கு பதில் அமைச்சர்கள் காமராஜ், செல்லூர் ராஜூ, வீரமணி, ராஜேந்தி பாலாஜி ஆகியோர் கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கினர். வீடுகளை இழந்த 6 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய், பகுதியாக வீடு இடிந்த 5 பேருக்கு தலா 4,100 ரூபாய் என மொத்தம் 822 பேருக்கு 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை, 5 லிட்டர் மண்ணெண்ணெய், ஒரு கிலோ ஆவின் பால் பவுடர் பாக்கெட் வழங்கினர்.