கஜா புயல்: காய்கறி விலை கடுமையாக உயரும் - வியாபாரிகள் எச்சரிக்கை

கஜா புயல் மீட்பு நிவாரண நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவில்லையென்றால் தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயரும் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கஜா புயல் மீட்பு நிவாரண நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவில்லையென்றால் தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயரும் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா மாவட்டத்தில் தென்னை,வாழை, மா, முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாகவும், இதனால் கோயம்பேட்டிற்கு வரும் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மீட்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்தி இன்னல்களை சந்தித்து வரும் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் எனவும் வியாபாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com