கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி : சமாதி அருகே பொங்கல் வைத்து வழிபாடு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி தமது குடும்பத்தினருடன், சமாதியில் பொங்கல் பண்டிகை கொண்டாடினார்.
கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி : சமாதி அருகே பொங்கல் வைத்து வழிபாடு
Published on
கொண்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த செல்லதுரை மற்றும் அவரது குடும்பத்தினர், விவசாயத்தை தொழிலாக கொண்டுள்ளனர். கஜா புயலில் வீட்டை இழந்த செல்லதுரையின் குடும்பத்தினர், தங்க இடமின்றி, அருகில் உள்ள சமாதியில் குடியிருந்து வருகின்றனர். தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை, வீட்டை இழந்த இடத்தில் கொண்டாடி பாரம்பரியத்தை நிலை நாட்டினர். வீட்டை இழந்த தங்களுக்கு அரசு வீடு கட்டி வேண்டும் என, செல்லத்துரை குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com