புயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் ரத்து? - தங்கமணி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக, முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக, முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின் சீரமைப்புக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தேவைக்கு அதிகமாகவே உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீர் செய்யும் பணிகளை அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், கருப்பணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com