"இழப்பீடுகளை உயர்த்தி வழங்க வேண்டும்" -ராமதாஸ்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"இழப்பீடுகளை உயர்த்தி வழங்க வேண்டும்" -ராமதாஸ்
Published on
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சேதமடைந்த குடிசைகள், படகுகள், மீன்வலைகள் உள்ளிட்ட எந்தப் பொருட்களுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானதல்ல எனவும் இது மக்களின் கண்ணீரைத் துடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் உணர்வுகளை மதித்து அதற்கேற்ற வகையில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com