ஜி ஸ்கொயர் நிறுவன பிரீமியம் வீட்டுமனை, வில்லாக்கள் திட்டம் தொடக்கம்
இந்தியாவின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர், திருச்சி ஸ்ரீரங்கத்தில், பிரீமியம் வீட்டு மனை மற்றும் வில்லாக்கள் திட்டமான ஜி ஸ்கொயர் ஜென் (Zen) திட்டத்தை அறிவித்தது. அதன்படி இந்த திட்டம் தொடங்கப்பட்ட 72 மணி நேரத்தில், 200 இடங்கள் விற்பனையாகி அபரிமிதமான வரவேற்பை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பதையே இந்த மைல்கல் சாதனை பிரதிபலிப்பதாக அந்நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
இதை கொண்டாடும் விதமாக ஜி ஸ்கொயர் ஜென் டவுன்ஷிப்பில், பிரபல பாடகி நித்யஸ்ரீயின் இசை நிகழ்ச்சி மற்றும் ரோபோ சங்கர் ஸ்டாண்டப் நகைச்சுவை நடிகர் விக்னேஷ் விஜயன் ஆகியோர் பங்கேற்ற ஜி ஸ்கொயர் உற்சவம் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை தலைவர் சிவக்குமார், ஸ்ரீரங்கத்தில் தங்கள் திட்டத்திற்கு கிடைத்த அற்புத வரவேற்பால் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார்.
