G Square | Kovai | ரியல் எஸ்டேட்டில் முக்கியத்துவம் பெறும் 'கோவை' - ஜி ஸ்கொயர்
கோவையில் ரியல் எஸ்டேட்டின் வளர்ச்சி வரும் காலங்களில் அதிகரிக்கும் என ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். கோவை மாவட்டத்தில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர், தங்களுடைய எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கமளித்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின்பு, தந்தி டிவியிடம் பேசிய அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம், கோவை தொழில்துறை, கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பெருமளவு அதிகரித்துள்ளதாக கருத்து தெரிவித்தார். இதன் காரணமாக இந்திய அளவில் பொதுமக்களுக்குத் தரமான வீட்டு வசதிகளையும், இடங்களையும் வழங்குவதில் ஜி ஸ்கொயர் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.
Next Story
