

கோரிக்கை நிறைவேறாத விரக்தி... தீக்குளித்த தொழிலாளி மரணம்.. உடல் ஊனமுற்ற மனைவி கதறல்
மாட்டுவண்டிக்கு மணல் குவாரி அமைக்காததை கண்டித்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்ற மாட்டு வண்டி தொழிலாளி, மாட்டு வண்டிக்கு மணல் குவாரி அமைத்திடுமாறு பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்துள்ளார். ஆனால் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் வேதனையடைந்த பாஸ்கர், கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தீக்குளித்தார். இதையடுத்து, தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். உயிரிழந்த தொழிலாளி பாஸ்கருக்கு உடல் ஊனமுற்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.