Frost | Ooty | தொடங்கியது உறைபனி சீசன்.. உறைந்து நிற்கும் ஊட்டி
தொடங்கியது உறைபனி சீசன்.. உறைந்து நிற்கும் ஊட்டி
தொடங்கியது உறைபனி சீசன்.. உறைந்து நிற்கும் ஊட்டி #frost #winter #ooty #nilgiris #thanthitv ஊட்டியில் தொடங்கியது உறைபனி பொழிவு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தலைகுந்தா, காந்தல், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டுக்கான உறைபனி பொழிவு தொடங்கியுள்ளது. புல்வெளிகள், சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது வெண்பஞ்சு போல உறைபனி படர்ந்தது. தாவரவியல் பூங்கா பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 5.9 டிகிரி செல்சியஸ் பதிவானது. கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், விவசாயப் பணிகளுக்குச் செல்வோரும் சிரமத்திற்கு ஆளாகினர்
