இன்று முதல் டோல்கேட்டில் கட்டண உயர்வு - அடேங்கப்பா.. இவ்வளவா?

x

தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதியும் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கமாக உள்ளது. தமிழகத்தில் 45க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 55 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 38 சுங்கச்சாவடிகளில், கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த‌து. இதன்படி விக்கிரவாண்டி, விஜயமங்கலம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த சுங்கசாவடிகளில், 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒருமுறை கட்டணம் 5 ரூபாய் முதல் 45 ரூபாய் வரையிலும், இருமுறை கட்டணம் 65 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதுவே பலமுறை பயணிக்க 155 ரூபாய் கட்டணமாக இருந்த நிலையில், தற்போது 160 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது . மாதாந்திர பயண கட்டணம் மூவாயிரத்து 100-இல் இருந்து மூவாயிரத்து170 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இலகு ரக வாகனம் ஒரு வழி கட்டணம் 180ல் இருந்து 185 ரூபாயாகவும், பல முறை பயணிக்க 270ல் இருந்து 275 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கனரக வாகனம் ஒரு வழி கட்டணம் 360 ரூபாயில் இருந்து 370 ரூபாயாகவும், பல முறை பயணிக்க, 540 ரூபாயில் இருந்து 555 ரூபாயாகவும் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்