இன்று முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள் - தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார்.
70 வயது முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ரேசன் பொருட்களை வழங்குவதே 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தை, சென்னை தண்டையார்பேட்டையில் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
ஒவ்வொரு மாதமும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் மூலம் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்காக 30 கோடியே16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
Next Story
