"இனி மனித மூளைக்கும்,கணினி மூளைக்கும்தான் போட்டி..!"

x

"இனி மனித மூளைக்கும்,கணினி மூளைக்கும்தான் போட்டி..!"

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு பொறியில் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில்,பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத், சிறப்புரையாற்றினார். விழாவில் பேசிய அவர், மனித ஆற்றலுக்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான போட்டி எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதாகவும்,மனித மூளைக்கும் கணினி மூளைக்கும் தான் இனி போட்டி என்றும் தன் உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சியில், கார் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் குமார், கல்லூரித் தலைவர் ரவி ஆகியோரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்