கிளாம்பாக்கம் To தாம்பரம் - போலீசை பார்த்ததும் மிரண்டு ஓடிய தனியார் பேருந்து ஓட்டுநர்
கிளாம்பாக்கத்தில் பயணிகளை 10 ரூபாய் தந்தால் தாம்பரத்தில் இறக்கி விடுவதாக அழைத்த தனியார் தொழிற்சாலை பேருந்து ஓட்டுநர், போலீசாரை பார்த்ததும் தாறுமாறாக பேருந்தை ஓட்டிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் ஆலையில் பணிபுரிவோரை அழைத்துச் செல்லும் பேருந்தின் ஓட்டுநர், பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பயணிகளிடம், 10 ரூபாய் கொடுத்துவிட்டு தாம்பரத்தில் இறங்கிக்கொள்ளலாம் என அழைத்துள்ளார். இதைப்பார்த்து, கேள்வி எழுப்பிய போக்குவரத்து போலீசார், ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததை கண்டுபிடித்து, கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். இதனால், பதறிப்போன ஓட்டுநர், பேருந்தை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றார்.
Next Story