“ஜூலை 1 முதல் ரயில் கட்டணம் உயர்த்தும் திட்டம் பரிசீலனை'' ரயில்வே இணை அமைச்சர் தகவல்

x

ஜூலை 1 முதல் ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் பரிசீலனை“

சென்னை ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில் உள்ளிட்டவையை மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமன்னா பார்வைட்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜூலை 1 முதல் ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும், அதை பிரதமரும், ரயில்வே துறை அமைச்சரும் முடிவு செய்வார்கள் என்றார். படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் விரைவில் அறிமுகமாகும் என்றும், தானியங்கி கதவுகள் கொண்ட மின்சார ரயில் பெட்டிகள் டிசம்பரில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் கூறினார். மேலும், ஹைட்ரஜன் ரயில் தயாரிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், ஜிந்த்–சோனிபட் வழித்தடத்தில் அதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்படும் எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்