Kummi Attam | சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை.. ஒரே உடையில்..வள்ளி கும்மி ஆட்டம் ஆடி அசத்திய மக்கள்

x

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கடமசெட்டிபாளையத்தில் 87 ஆவது பவளக்கொடி கும்மி ஆட்டம் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கலை குழுவை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் என குழுவாக ஒரே சீருடை அணிந்து கிராமிய பாடலுக்கு ஏற்றார் போல் நடனமாடினர். இதனை, குருமந்தூர், குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்