friendship day tragedy | நண்பர்கள் தின கொண்டாட்டத்தில் நண்பர்களால் நேர்ந்த சம்பவம்
இன்ஸ்டாவால் மலர்ந்த நட்பு, மதுவால் அழிந்த சோகம்
செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் விளையாட்டு மைதானத்தில் தொங்கிய சடலத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த நெய்வேலி கிராமத்தை சேர்ந்த 19 வயதான ராஜாராம் என்பவர் சந்தோஷ்குமார், இளம்பரிதி என்பவர்களோடு இன்ஸ்டாகிராமில் நண்பர்களாகியுள்ளார். இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, மூவரும் மது அருந்தியுள்ளனர். அப்பொழுது ஏற்பட்ட தகராறில் இரு ரவுடிகளும் சேர்ந்து ராஜேஷை அடித்து கொன்று, மரத்தில் தொங்கவிட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில், தற்கொலை செய்தது போல சித்தரித்ததை ஒப்புக்கொண்டனர். போலீசார் இருவரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
Next Story
