நண்பன் காதல் ஜெயிக்க உயிரை விட்ட `உயிர் நண்பன்’ - காட்டுக்குள் நடந்த காதல் சமரசத்தில் முறைமாமன் வதம்
விருதுநகர் சாத்தூர் அருகேயுள்ள பட்டாசு ஆலையின் பின்புறமிருந்த காட்டுப்பகுதி அன்று காவல்துறையினரின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் இருந்தது.ஒரு கொலைவெறி கும்பல் 24 வயது வாலிபரை ஓட... ஓட வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளது.இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர்காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருக்கும் இந்த ப்ளூ டீ சர்ட் அணிந்திருக்கும் நபர் தான் சம்பவத்தை நேரில் பார்த்தவர்.இவருடைய பெயர் சிங்கேஸ்வரன். இவருடன் பட்டாசு ஆலையில் ஒன்றாக வேலை பார்த்து வந்த ஒத்தையால் தெற்கு தெரு பகுதியை சேர்ந்த சங்கரேஸ்வரன் என்பவரை தான் அந்த கும்பல் வெட்டி சரித்திருக்கிறது.கடந்த சில வருடங்களாக சிங்கேஷ்வரனும், கண்மாய் சூரங்குடியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இது அந்த இளம்பெண்ணின் முறைமாமனான விஜய்பாண்டிக்கு தெரியவர அவர் உடனடியாக மாமன் மகளின் காதலை கண்டித்துள்ளார்.இதனால் காதலி மிகுந்த மன உளைச்சலில் இருந்த காரணத்தால் சிங்கேஷ்வரனும் பணியிடத்தில் சோகமாக இருந்துள்ளார்.இந்நிலையில் தான் நண்பருக்கு உதவுவதற்காக சங்கரேஷ்வரன் இவர்களின் காதல் விவகாரத்தில் தலையிட்டுள்ளார்.விஜய் பாண்டியை நினைத்து பயத்தில் நடுங்கி போயிருந்த காதலர்கள் இருவருக்கும் ஆறுதல் சொன்ன சங்கரேஸ்வரன், சம்பவம் நடந்தன்று அவர் பணியாற்றும் பட்டாசு ஆலை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு விஜய் பாண்டியை சமரசம் பேச அழைத்திருக்கிறார்.
அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் சிங்கேஷ்வரனும், இளம்பெண்ணும் காதலை முறித்த கொள்ள தயாராக இல்லை. அதன்காரணமாக கொதித்தெழுந்த விஜய் பாண்டியும் அவரது கூட்டாளிகள் இருவரும் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிங்கேஷ்வரனை வெட்டிக் கொலை செய்ய முயன்றிருக்கிறார்கள். இதனை சங்கரேஷ்வரன் தடுக்க முற்பட்டதால் மொத்த கோபமும் அவர் மீது திரும்பி இருக்கிறது.
பஞ்சாயத்து பேசுவதற்காக அழைத்த சங்கரேஷ்வரனை ஓட ஓட வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளது விசாரணையில் உறுதியாகி உள்ளது.நடந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த சாத்தூர் தாலுகா காவல்துறையினர் தலைமறைவாக இருந்த கொலையாளிகள் விஜய் பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகளான ராஜபாண்டி மற்றும் அபி ஆகிய மூவரையும் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
