

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிழ்த்தான் பகுதியில், நண்பரை சக நண்பர்களே வீடு புகுந்து வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுந்தரமூர்த்தி, ஈஸ்வரன் ஆகியோர் நண்பர்களாக பழகிவந்த நிலையில், சமீப காலமாக குடிநீர் பிடிப்பதில் இருவருக்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திய ஈஸ்வரன், தனது சக நண்பர்கள் இருவரை அழைத்துகொண்டு, சுந்தரமூர்த்தியின் வீடு புகுந்து அவரை வெட்டி கொலை செய்துள்ளார். தகவல் அறிந்த வண்ணியம்பட்டி போலீசார், ஈஸ்வரனை கைது செய்துள்ளனர். மற்ற இரு நண்பர்களை தேடி வருகின்றனர்.