செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த நிர்மல்குமார் என்ற இளைஞர் கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்த போது தேவையான ரத்தம் கிடைக்காததே அவருடைய மரணத்திற்கு காரணமாக சொல்லப்பட்டது. இதையடுத்து அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து நிர்மல் குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் ரத்த தானம் செய்தனர். ரத்தம் கிடைக்காமல் இனி எந்த உயிரும் போகக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த முயற்சியை கையில் எடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.