திருபத்தூர்| மது போதையில் இளைஞரின் உதட்டைக் கடித்த நண்பர்
மது போதையில் இளைஞரின் உதட்டைக் கடித்த நண்பர்
திருப்பத்தூர் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், வாலிபரின் உதட்டைக் கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகரம் கௌரன் வட்டம் பகுதியைச் சேர்ந்த முரளி, நண்பர்களான பிரேம்குமார், அன்பழகன் ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பிரேம்குமார், முரளியின் உதட்டைக் கடித்துள்ளார். படுகாயமடைந்த முரளி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், புகாரின் பேரில் பிரேம்குமார், அன்பழகன் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
