ஃப்ரீ பயர் கேம் மும்முரம்.. கிளைமேக்ஸில் போலீஸ் வந்த சம்பவம் | Free Fire | Police | Ambai | Nellai

ஆன்லைனில் ஃப்ரீ ஃபையர் விளையாடியபோது தகராறு ஏற்பட்டு, கல்லுரி மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் 22 பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், 9 பேரை கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அடுத்த கங்கனான்குளத்தில் இயங்கி வரும் கல்லூரி மாணவர்கள் இவ்வாறு மோதிக்கொண்டுள்ளனர். ஆன்லைனில் ஃப்ரீ ஃபையர் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பு மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதில் சிலர் காயமடைந்தனர். புகாரின் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், கல்லூரி மாணவர்கள் 22 பேர் மீது வழக்குபதிவு செய்த நிலையில், இரு தரப்பையும் சேர்ந்த 9 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com