சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்
சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அழகுமுத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று அழகுமுத்துக்கோனின் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களும் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story
