இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம் - ஆனந்த கண்ணீரில் ஏழை எளிய ஜோடிகள்

x

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம் - ஆனந்த கண்ணீரில் ஏழை எளிய ஜோடிகள்

ஜோடிகளுக்கு இலவச திருமணம் - சீர்வரிசை வழங்கி மகிழ்ச்சி

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் தமிழக அரசு சார்பில் 20, ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மாற்றுத்திறனாளி உள்ளிட்ட இணை மணமக்களுக்கு தாலியெடுத்து கொடுத்து, திருமணத்தை நடத்தி வைத்தார். இந்நிகழ்வில் 4 கிராம் தங்கத்தாலி , கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைகள் மணமக்களுக்கு வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்