யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் இலவச மதிய உணவு

x

சென்னையில் உள்ள சைதை துரைசாமியின் மனிதநேயம் கட்டணமில்லா ஐஏஎஸ் கல்வியகம் சார்பில், யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி நடத்தும் முதன்மைத் தேர்வு, ஆகஸ்ட் 22-ஆம் தேதி தொடங்கி வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வினை, மனிதநேயம் கட்டணமில்லா ஐஏஎஸ் கல்வியகத்தில் பயிற்சி பெற்ற 711 மாணவ, மாணவிகள், எழும்பூர் பிரசிடென்சி மகளிர் உயர்நிலைப் பள்ளி, பெரியமேடு செங்கல்வராய நாயக்கர் கலை அறிவியில் கல்லூரி, செனாய் நகர் புல்லா அவென்யூவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செனாய் நகர் சுப்பராயன் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் எழுதுகிறார்கள். அவர்களுக்கு சைதை துரைசாமியின் மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ் கல்வியகம் சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்