இலவச ஆடு வழங்கும் திட்ட ஏற்பாடுகளில் குழப்பம் : வெயிலில் நின்ற மூதாட்டிகள் மயக்கம்

இலவச ஆடுகள் வழங்கும் திட்ட பயனாளிகளை தேர்வு செய்வதற்காக நான்கு ஊராட்சிகளை சேர்ந்த மக்களை ஒரே நேரத்தில் வரவைத்ததால் குழப்பம் ஏற்பட்டது.
இலவச ஆடு வழங்கும் திட்ட ஏற்பாடுகளில் குழப்பம் : வெயிலில் நின்ற மூதாட்டிகள் மயக்கம்
Published on
இலவச ஆடுகள் வழங்கும் திட்ட பயனாளிகளை தேர்வு செய்வதற்காக நான்கு ஊராட்சிகளை சேர்ந்த மக்களை ஒரே நேரத்தில் வரவைத்ததால் குழப்பம் ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலுர் அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த நான்கு ஊர் மக்களை, பூசாரிப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரிக்கு வரவழைத்த அதிகாரிகள் அங்கு முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு மக்கள் வரிசையாக நின்றதுடன், வெயில் தாங்க முடியாத மூதாட்டிகள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com