Free Fire | ஃப்ரீ ஃபயர் விளையாட்டால் நேர்ந்த விபரீதம்.. போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற மாணவர்கள்

ஃப்ரீ ஃபயர் விளையாட்டால் நேர்ந்த விபரீதம்.. போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற மாணவர்கள்

சென்னையில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டால், பள்ளி மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனர். சென்னை வியாசர்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவரை, சக மாணவர்கள் தாக்கியதில், அவருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. இந்த புகார் காவல் நிலையம் வரை சென்றதால், மாணவர்களின் பெற்றோர்களை போலீசார் வரவழைத்து எச்சரித்து அனுப்பினர். விசாரணையில், மூன்று மாதத்திற்கு முன் ஃப்ரீ ஃபயர் கேம் விளையாடிய போது பிரச்சனை ஏற்பட்டு, மாணவர்கள் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையால் பேசிக் கொண்டதும், அதனால் சண்டை ஏற்பட்டதும் தெரிய வந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com