Free Fastag Recharge | இந்த பாத்ரூமை போட்டோ எடுத்து அனுப்பினால் ரூ.1000 பரிசு - செம அறிவிப்பு
தேசிய நெடுஞ்சாலையில் அசுத்தமான கழிவறை குறித்து புகைப்படம் எடுத்து பதிவிட்டால் 1000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், “தூய்மையான கழிவறை புகைப்பட சவால்“ என்ற போட்டியை அறிவித்துள்ளது. அதன்படி சுங்கச்சாவடி அருகே, அசுத்தமாக உள்ள கழிவறைகளின் புகைப்படத்தை “ராஜ்மார்க் யாத்ரா“ (Rajmargyatra) எனும் செயலியில், தங்கள் விவரங்களோடு பதிவிட வேண்டும். பதிவிட்ட கழிப்பறை அசுத்தமாக இருப்பது உறுதியானால், பயனாளர்களுக்கு 1000 ரூபாய் பரிசாக வழங்கப்படும். இது ரொக்கமாக வழங்கப்படாமல் “Fastag" ரீசார்ஜ் ஆக வழங்கப்படும் எனவும், அக்டோபர் 31 வரை மட்டுமே இந்த போட்டி எனவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
Next Story
