ரூ.31 லட்சம் மோசடி.. காஞ்சியை கலக்கிய சகோதரர்கள் | Kanchipuram | Brothers | Insurance

மதுரை மாவட்டம், வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். பட்டதாரியான இவர், பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில் பணியாற்றி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள வாகனங்களுக்கு காப்பீடு வழங்கி வந்தார். இந்நிலையில், இவரது சகோதரரான ராஜேஷ்குமார் என்பவர், விக்னேஷின் காப்பீடு முகவர் கடவு எண்ணை பயன்படுத்தி நான்கு சக்கர வாகனங்களுக்கு போலியாக காப்பீடுகள் வழங்கியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், போலியாக காப்பீடு சான்றிதழ் வழங்கி 31 லட்சத்து 46 ஆயிரத்து 10 ரூபாய் மோசடி செய்தது கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com