சதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி.. இரிடியம் என கூறி ரூ. 400கோடிக்கு விற்க முயன்ற பொருள்

x

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் சதுரங்க வேட்டை பட பாணியில் கலச சொம்பை, 400 கோடிக்கு விற்க முயன்ற மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெய்வேலியை சேர்ந்தவர் முருகன் இவரிடம் சேலத்தை சேர்ந்த கேசவன் என்பவர், தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும், அதை 400 கோடிக்கு விற்று பணத்தை இருவரும் சமமாக பிரித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார். இதையடுத்து, முருகன் முன்பணமாக 30 லட்சத்தை கேசவனிடம் கொடுத்து இரிடியம் என கூறப்படும் பொருளை வாங்கியுள்ளார். இதனிடையே, கேசவன் திடீரென உயிரிழக்க தனக்கு அதிர்ஷ்டம் வந்து விட்டதாக கூறிய முருகன் தனியாக விற்று 400 கோடியையும் எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார். இதனிடையே, மோசடி கும்பல் குறித்து மாவட்ட குற்ற நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இரிடியத்தை வாங்கும் கடத்தல் வியாபாரி போன்று, முருகனை தொடர்பு கொண்ட போலீசார், தட்டி தூக்கியுள்ளனர். விசாரணையில் இரிடியம் என கூறி கலச சொம்பை விற்க முயன்றதும், சென்னையில் கடத்தல் பொருட்களை ஆய்வு செய்யும் போலி ஆய்வகம் ஒன்றை நடத்தி மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்