சிவகங்கையில் உள்ளாட்சி தேர்தலின் போது மோசடி.. 3 பேர் மீது வழக்கு

x

சிவகங்கையில் உள்ளாட்சி தேர்தலின்போது 6 லட்சத்து 99 ஆயிரத்து 715 ரூபாய் மோசடி செய்ததாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட மூவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கண்ணங்குடி ஊராட்சியில் 2021 ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலராக பழனியம்மாளும், துணை வட்டார வளர்ச்சி அலுவலராக சுப்ரமணியன் என்பவரும், உதவி பொறியாளராக திருமாறன் என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் மூவரும் கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது பந்தல் அமைத்தல், வாக்கு பெட்டிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதாக கூறி போலி பில் தயாரித்து பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில் சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை விசாரனை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்