Kanniyakumari | புகழ்பெற்ற கோயிலில் மோசடி..கணக்கர் சஸ்பெண்ட்

புகழ்பெற்ற கோயிலில் மோசடி..கணக்கர் சஸ்பெண்ட்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில், சிறப்பு பூஜைகளுக்காக லட்சக் கணக்காக பணம் வசூலித்து மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது... தாணுமாலய சுவாமி கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்கள்... இங்கு ஆடி, கார்த்திகை, பிரதோஷம், அமாவாசை பெளர்ணமி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன... இதற்காக சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடத்துவதற்காக பக்தர்கள் கட்டணம் செலுத்தி ரசீது பெற்று வழிபடுவது வழக்கம்... இந்நிலையில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக கணக்கராக பணியாற்றிவந்த கண்ணன் என்பவர் மோசடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது... இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், பக்தர்களிடம் வசூலிக்கப்பட்ட பணம், முறையாக வரவு வைக்கப்படாதது தெரியவந்தது.. இதையடுத்து கோவில் கணக்கர் கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்... இதில் வேறு யாரும் தொடர்பில் உள்ளார்களா எனவும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com