சைக்கிளில் வலம் வரும் ஃபிரான்ஸ் தம்பதி - சுற்றுச்சூழல் மாசை தடுக்க சைக்கிளில் விழிப்புணர்வு

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு பிரான்ஸ் நாட்டு தம்பதி நவீன சைக்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
சைக்கிளில் வலம் வரும் ஃபிரான்ஸ் தம்பதி - சுற்றுச்சூழல் மாசை தடுக்க சைக்கிளில் விழிப்புணர்வு
Published on

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 70 வயதான முன்னாள் ராணுவ வீரர் பெடீசியர் கை. தனது மனைவியுடன் விமானம் மூலம் சென்னை வந்த இவர், அங்கிருந்து சைக்கிள் மூலம் மாமல்லபுரம் சென்றார்.

பயண தூரத்தை காட்டும் கருவி உள்ளிட்ட பல வசதிகளுடன் கூடிய இந்த சைக்கிளில் தமிழகம், கேரளாவில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல உள்ளதாக இருவரும் கூறுகின்றனர். உடல் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வழிகாட்டிகள் உதவியை நாடாமல், வரைபடம் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் இந்த தம்பதியுடன் மாமல்லபுரத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பலர் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com