கடல் ஆமைகளை இறைச்சிக்காக வேட்டையாடிய 4 பேர் கைது

x

ராமநாதபுரம் அருகே கடல் ஆமைகளை இறைச்சிக்காக வேட்டையாடியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அப்பா தீவுக்கு அருகே வனத்துறை குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் , படகில் இருந்த நபர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் உயிரிழந்த நிலையில் 2 பச்சை கடல் ஆமை இருந்தது அம்பலமானது. பாதுகாக்கப்பட்ட ஆமை இனத்தை வேட்டையாடிய 4 பேரை கைது செய்த வனத்துறையினர், கடல் ஆமைகளை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்