4 நாய்கள் விஷம் வைத்து கொலை - தோட்ட பணியாளர் கைது
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நாய்களை விஷம் வைத்துக் கொன்ற சம்பவத்தில் தோட்டத்து பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்,
கோழிக்கறியில் குருணை மருந்து கலந்து நாயை கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது...
ஈரோடு மாவட்டம் சென்னிமலை த பா.ஜ.க நிர்வாகியாக இருப்பவர் கலைவாணி-பாஸ்கர். சொக்கநாத பாளையம் பகுதியில் தோட்டத்து வீட்டில் கணவருடன் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.
தோட்டத்து வீட்டில் வசித்து வருவதால் பாதுகாப்பிற்காக 4 வளர்ப்பு நாய்களை வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வழக்கத்துக்கு மாறாக நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டது. இதனால் அச்சமடைந்த தம்பதியினர் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்தனர்.
அதிகாலை வெளியே வந்து பார்த்தபோது வளர்ப்பு நாய்களில் ஒரு நாய் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மற்றொரு நாய் சோறுவாக காணப்பட்டது. மேலும் இரண்டு வளர்ப்பு நாய் மாயமாகி இருந்தது. ஈரோடு மாவட்டம் சிவகிரி நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம்,திருப்பூர் மாவட்டத்தில் தோட்டத்து வீடுகளில் தனியாக வசிக்கும் வயதான தம்பதிகளை குறி வைத்து மர்மகும்பல் கொலை செய்யப்பட்டது, இதையடுத்து கீழ் பவானி வாய்க்கால் கரையோரமாக தனியாக வசிக்கும் தம்பதியினரை குறி வைத்து கொலை கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் இதுகுறித்து சென்னிமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஈரோடு மாவட்ட எஸ்பி சுஜாதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இறந்த நாயின் உடல் பிரேத பரிசோதனை செய்வதில் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக 2 தனி படைகள் அமைக்கப்பட்டன.
போலீஸ் விசாரணையில் கலைவாணி பாஸ்கர் வீட்டில் வளர்க்கும் நாய்கள் அருகே உள்ள கோழிகளை கடித்து வந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக விஷம் வைத்து நாய்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தினர்.
அப்போது கீழ்பவானி வாய்க்கால் கரையில் குருணை மருந்து கலந்த உணவினை நாய்கள் சாப்பிட்டுள்ளது தெரியவந்தது. சம்பவ இடத்தின் அருகே உள்ள இடங்களை சோதனை செய்த போது கீழ்பவானி வாய்க்கால் கரையில் குருணை மருந்து கலந்த கோழி இறைச்சியின் தோள்கள் மற்றும் குருணை மருந்துகள் சிதறி கிடந்தன.
மேலும் நாய்களுக்கு உணவளிக்கும் தட்டில் குருணை மருந்து கலந்ததற்கான தடயமும் கிடைத்தது.
இதனை அதே தோட்டத்தில் வேலை பார்க்கும் பழனிச்சாமி (45) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரிடம் தனியாக விசாரணை நடத்தியதில் நாய்களை விஷம் வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து போலீசார் கூறும்போது,
கலைவாணி பாஸ்கர் பாதுகாப்பிற்காக 4 நாய்களை வளர்த்து வந்துள்ளார். இந்த வளர்ப்பு நாய்கள் அருகே தோட்டத்து வீட்டில் வசிக்கும் கோழிகளை கடித்து வந்தது தெரிய வந்தது. அதைத் தோட்டத்தில் வேலை பார்க்கும் பழனிச்சாமி என்பவரின் 30 கோழிகளையும் இந்த வளர்ப்பு நாய்கள் கடித்துக் கொண்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பழனிச்சாமி சம்பவத்தன்று வளர்ப்பு நாய்களுக்கு கோழிக்கறியில் குருணை மருந்து ( விஷம்) கலந்து வைத்துள்ளார். இதில் முதலில் ஏற்கனவே ஒரு நாய் இறந்துவிட்டது. மாயமான 2 நாய்களில் ஒரு நாயின் உடல் அருகே உள்ள தோட்டத்து கால்வாய் புதரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு நாயின் உடலை தேடி வருகிறோம் என்றனர்.
இதை அடுத்து பழனிசாமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறிது நாளாக நடந்து வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. மேலும் அந்தப் பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தீவிர குற்றத் தடுப்பு நடவடிக்கைகளாக 24 மணி நேரமும் 55 இருசக்கர வாகனம் மற்றும் 3 நான்கு சக்கர வாகன ரோந்து படைகள் நியமிக்கப்பட்டும், பத்து சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டும், துப்பாக்கி இந்திய போலீசார் கொண்ட குழுக்கள் வாய்க்கால் பகுதிகளில் சுழற்சி முறையில் தீவிர ரோந்தில் ஈடுபடுத்தப்பட்டு வாய்க்கால் ஓரங்களில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் குறித்து கணக்கிடு செய்வதும் சந்தேக நபர்களை பிடித்து அவர்களது கைரேகை பதிவுகள் எடுக்கப்பட்டு முந்தைய வழக்கில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் பண்ணை வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் காவல்துறை மற்றும் பொதுமக்கள் சார்பில் பொருத்தப்பட்டு காவல் நிலையத்திலிருந்து கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது மேலும் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. சென்னிமலை பகுதியில் சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
