ரயில் படிக்கட்டில் பயணம் செய்த 4 பேர் பலி

சென்னையில், மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்த 4 பேர், ரயில் நிலைய தடுப்புச் சுவர் மோதி உயிரிழந்தனர்.

"தடுப்புச்சுவரை அகற்ற நடவடிக்கை"

விபத்து குறித்து விசாரித்து வருகிறோம்; படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். மேலும் இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்காமல் இருக்கவும், தடுப்புச்சுவரை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

"காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை"

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பலியான 4 பேரில் 3 பேர் மாணவர்கள்

இதனிடையே, ரயில் விபத்தில் உயிரிழந்த நான்கு பேரில் மூன்று பேர் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது. கல்லூரி மாணவர் சிவக்குமார், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் பரத், பாலிடெக்னிக் மாணவர் விஜய், எலக்ட்ரீசியன் நவீன்குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இரண்டு கால்களை இழந்த மூர்த்தி என்பவருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல, படுகாயமடைந்த விஜய் மற்றும் முகமது யாசர் ஆகியோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சிவகுமாரின் நண்பன் கோரிக்கை

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

X

Thanthi TV
www.thanthitv.com