Cuddalore | SIR | கடலூர் மக்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..
கடலூர் மாவட்டத்தில் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்
கடலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்டவற்றுக்காக 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மற்றும் புகைப்படம் மாற்றம் ஆகியவற்றிற்காக டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3 மற்றும் 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை இணையதளத்திலும் பொதுமக்கள் சமர்ப்பிக்கலாம் என்றும்,
பெறப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் விசாரணைமேற்கொண்டு,
வரும் பிப்ரவரி 17ம் தேதி வெளியிடப்படவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
