பாறைக்குழியில் வீசிய துர்நாற்றம் - காவல்துறை சொன்ன முக்கிய தகவல்

x

பொள்ளாச்சி அருகே தனி நபருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள பாறைக்குழியில் கேரள மருத்துவக் கழிவுகள் இல்லை என்று கோவை காவல் துறை தெரிவித்துள்ளது. காணியாம்பாளையத்தில், பாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில், கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதாக, சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதையடுத்து, வருவாய்த் துறை மற்றும் போலீசார் ஆய்வு செய்ததில், அந்த நிலத்தில் கேரள மருத்துவக் கழிவுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தினர். பாலகிருஷ்ணன் தனது நிலத்தில் இருந்த பாறைக்குழியை மூடுவதற்கு கொட்டியிருந்த குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது. அந்த கழிவுகளை அகற்றுமாறு பாலகிருஷ்ணனுக்கு உத்தரவிடப்பட்டுளது என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்